sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

திருவனந்தபுரத்தில் திருவட்டார் நகைகள் பக்தர்கள் சங்கம் சொல்கிறது

/

திருவனந்தபுரத்தில் திருவட்டார் நகைகள் பக்தர்கள் சங்கம் சொல்கிறது

திருவனந்தபுரத்தில் திருவட்டார் நகைகள் பக்தர்கள் சங்கம் சொல்கிறது

திருவனந்தபுரத்தில் திருவட்டார் நகைகள் பக்தர்கள் சங்கம் சொல்கிறது


ADDED : ஜூலை 14, 2011 12:32 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குலசேகரம் : திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் உள்ள ஆபரணங்களில் 50 சதவீதம் திருவட்டார் ஆதிகேசவனுக்கு சொந்தமானது என திருவட்டார் ஆதிகேசவ பக்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



இது குறித்து திருவட்டார் ஆதிகேசவ பக்தர்கள் சங்க துணைத்தலைவர் பகவதி கூறியதாவது: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த தங்க, வைர, வைடூரிய நகைகள் சுமார் 1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என கூறுவது வியப்பளிக்கவில்லை. மேலும் அதிகமான நகைகள் இருக்ககூடும். இந்த நகைகளில் 50 சதவீதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு சொந்தமானதாகும். பரசுராமன் தவம் செய்தபோது ஆதிகேசவ பெருமாள் கட்சியளித்து அருள்பாலித்ததால் பரசுராமனால் கட்டப்பட்டது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில். அதன்பிறகு வில்வமங்கலம் சுவாமி பத்மனாபசுவாமி கோயிலை பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.



குமரி மாவட்டம் பத்மனாபபுரத்தை தலைமையிடமாக கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை மன்னர்கள் ஆட்சிபுரிந்த போது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தின் குலதெய்வமாக போற்றப்பட்டார். அப்போது ஆதிகேசவ பெருமாளுக்கு சொந்தமான நகைகள் கல்குளம் நீலகண்டசுவாமி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதிகேசவ பெருமாளின் ஆபரணங்கள் திருவனந்தபுரம் கோயிலில் வைத்து பாதுகாத்து வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் உள்ள நகைகளில் 50 சதவீதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு சொந்தமானது. எனவே இந்நகைகளை ஆதிகேசவ பெருமாளுக்கு தரவேண்டும் என பகவதி கூறினார்.










      Dinamalar
      Follow us