/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கேலி செய்த அப்பாவை ஆள் அனுப்பி கொன்ற மகன் கைது
/
கேலி செய்த அப்பாவை ஆள் அனுப்பி கொன்ற மகன் கைது
ADDED : ஏப் 27, 2024 01:34 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன், 65. தனியார் நிறுவன காவலாளி. கடந்த 10-ம் தேதி படுகாயங்களுடன் கிடந்தார்.
இதுபற்றி மகன் அனிஷ்குமாரிடம் விசாரித்த போது, தந்தைக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், டூ - வீலரில் இருந்து தவறி விழுந்திருக்கலாம்; பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி, மருத்துவமனை யில் பிரபாகரன் இறந்தார். பிரேத பரிசோதனையில், அவரது தலையில் காயங்கள் மற்றும் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
அனிஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நண்பர்களுடன் சேர்ந்து, தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
நான் டிப்ளமா படித்துள்ளேன். 2019-ல் திருமணம் நடைபெற்றது. நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் என் தந்தை அடிக்கடி, 'குழந்தை பெத்துக்க முடியாதவன். வாய் பேசுகிறான்' என்று திட்டுவார். நான்கு மாதங்களுக்கு முன் எனக்கு குழந்தை பிறந்தது.
இதனால் தந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்து நண்பர்கள் ராஜா, சுதன் ஆகியோரிடம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து, தந்தையை கொலை செய்ய கூறினேன். அவர்களும் அவரை அடித்து படுகாயம் அடைய செய்தனர். பின், மருத்துவமனையில் அவர் இறந்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனீஷ்குமார், தட்டான்பிள்ளை பாரதி நகரைச் சேர்ந்த சுதன், 21, பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜா, 25, ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

