UPDATED : நவ 16, 2026 08:10 PM
ADDED : நவ 16, 2026 08:10 PM

அ நிறம் | அளவு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பு அருகே கடை ஷட்டருக்கு இடையில் சிக்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியிலிருந்து முந்திரி கிணற்றுக்குச் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஷட்டரில் ஏதோ அசைவது போல் தெரிந்தது. அதை அப்பகுதியினர் பார்த்தபோது ஒரு பெரிய மலைப்பாம்பு என தெரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பாம்பை லாவகமாக பிடித்து வெளியே கொண்டு வந்தனர். 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கோணிப்பையில் அடைத்து வனப்பகுதியில் விட கொண்டு சென்றனர்.
