ADDED : அக் 27, 2026 05:29 PM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் நகை கடையில் 2 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி அருகே லீபுரம் மெய்ஞானபுரத்தை சேர்ந்தவர் செல்வ ஆனந்த் 31. வட்டக்கோட்டை சந்திப்பு பகுதியில் தங்கம், வெள்ளி நகைகளை வாங்கி மறு விலைக்கு விற்கும் கடை நடத்துகிறார்.
ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று (அக்.,27) காலை கடைக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஷட்டரை துாக்கி உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 2 கிலோ வெள்ளி நகை, ரூ.6000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.
