தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/கனிமவளங்களை கடத்திய 5 லாரிகள் பறிமுதல்: 3 எஸ்.எஸ்.ஐ.க்கள் மாற்றம்

கனிமவளங்களை கடத்திய 5 லாரிகள் பறிமுதல்: 3 எஸ்.எஸ்.ஐ.க்கள் மாற்றம்

கனிமவளங்களை கடத்திய 5 லாரிகள் பறிமுதல்: 3 எஸ்.எஸ்.ஐ.க்கள் மாற்றம்


UPDATED : நவ 27, 2026 06:38 PM

ADDED : நவ 27, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 06:38 PM ADDED : நவ 27, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை கடத்திய ஐந்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

இம்மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கோழிப்போர்விளை, களியக்காவிளை சோதனை சாவடிகள் வழியாக எந்த அனுமதியும் இன்றி கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நித்திரவிளை அருகே எடப்பாடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனிமவள லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஸ்டாலின், ஜார்ஜ் விஜயன், நாராயண மணி, அருண், ஜான் பீட்டர், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் களியக்காளை மற்றும் பளுகல் சோதனை சாவடிகள் வழியாக விதிகளை மீறி கனிம வளங்களை வாகனங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us