/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மருத்துவக்கழிவுகளை கொட்ட வந்த வேனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

ADDED : மார் 17, 2024 07:26 AM
நாகர்கோவில் : கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கொட்ட வந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவில் இருந்து இறைச்சி ,மீன் மற்றும் மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டிச்செல்கின்றனர். இதனால் பல சாலைகளிலும் துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வாறு கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அதிகாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் கொட்டி சென்று விடுகின்றனர்.
இவ்வாறு நேற்று அதிகாலை மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்த வேனை பொதுமக்கள் துரத்தி சென்று குழித்துறை பழைய பாலத்தின் மேற்கு பகுதியில் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த குழித்துறை நகராட்சி அதிகாரிகள் வேனை ஆய்வு செய்தபோது அதில் மருத்துவக் கழிவுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வேன் பறிமுதல் செய்யப்பட்டதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.