/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க ஐயப்பன் சிலைகள் கொண்டு செல்ல தடை
/
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க ஐயப்பன் சிலைகள் கொண்டு செல்ல தடை
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க ஐயப்பன் சிலைகள் கொண்டு செல்ல தடை
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க ஐயப்பன் சிலைகள் கொண்டு செல்ல தடை
ADDED : டிச 01, 2025 12:52 AM
நாகர்கோவில்: சபரிமலையில் போட்டோ எடுப்பதற்கும், ஐயப்பன் சிலைகளை கொண்டு செல்வதற்கும் தடை விதித்து தேவசம்போர்டு உத்தரவிட்டுள் ளது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில் பக்தர்கள் தங்கள் அலைபேசியில் போட்டோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி போட்டோ எடுப்பவர்களின் அலைபேசி பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
ஏற்கனவே செய்தியாளர்களுக்கும் இங்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே செய்தியாளர்கள் திருமுற்றத்தில் போட்டோ எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் ஐயப்பன் சிலைகளை இருமுடி கட்டுடன் கொண்டு வந்து, ஐயப்பனை தரிசனம் நடத்திய பின்னர் ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் சிலைகளை கொண்டு வரும் பக்தர்கள் படி ஏறுவதற்கு முன்னர் அதை எங்காவது வைத்துவிட்டு படியேறி ஐயப்பனை தரிசித்து திரும்பி போகும் போது எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பம்பை நதியில் பக்தர்கள் களையும் ஆடைகளை எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. ஆனாலும் நதியில் குவியும் ஆடைகளை அள்ளுவது சிரமமாக உள்ளது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், 15 ஊழியர்கள் பம்பை நதிக்கரையில் ஒவ்வொரு 750 மீட்டர் இடைவெளியில் நின்று தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருப்பார்கள் என்றும் தேவசம் பேர்டு கூறியுள்ளது.

