/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நோ ஸ்மோக்கிங் ஏரியா ஆன பஸ் ஸ்டாண்டுகள்
/
நோ ஸ்மோக்கிங் ஏரியா ஆன பஸ் ஸ்டாண்டுகள்
ADDED : ஜன 21, 2025 06:27 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட பஸ் ஸ்டாண்டுகளில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து போலீசார் பீடி, சிகரெட்டுகளை எடுத்து சென்றனர்.
குமரி மாவட்ட புதிய எஸ்.பி., யாக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இரவு நேர டீ கடைகளை மூட உத்தரவிட்டார்.
பல்வேறு வணிகர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக அது விலக்கிக் கொள்ளப்பட்டது. பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பதற்கு தடை விதித்ததோடு அனைத்து கடைகளிலும்' நோ ஸ்மோக்கிங் ஏரியா என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இதை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீடி, சிகரெட், புகையிலைப் பொருட்களை போலீசார் கைப்பற்றி சென்றனர்.

