/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
/
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
ADDED : டிச 18, 2025 01:43 AM
நாகர்கோவில்: மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டு, நான்காவது சிறையிலும் சிறை அதிகாரியை தாக்கிய கைதி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வடக்கு காருகுறிச்சியை சேர்ந்தவர் உக்கிரபாண்டி, 23. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருந்தனர்.
சிறை அதிகா ரிகளை தாக்கியதால், இவர் அம்பை, துாத்துக்குடி பேரூரணி, திருநெல்வேலி மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டிருந்தார். நவ., 26ல், இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, துாக்க மாத்திரை கேட்ட உக்கிரபாண்டி, ஸ்டாலின் சார்லஸ் என்ற சிறை காவலரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை தட்டிக் கேட்க வந்த பிற காவலர்களான பிரவீன், சார்ஜின் ஆகியோரையும் தாக்கினார். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறை கண்காணிப்பாளர் வேலுமணி புகாரில், உக்கிரபாண்டி மீது நேசமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

