/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
போதை கடத்தலில் கம்யூ., பிரமுகர் கைது
/
போதை கடத்தலில் கம்யூ., பிரமுகர் கைது
ADDED : ஜூலை 08, 2025 05:05 AM
திருவனந்தபுரம்: பெங்களூருவில் இருந்து காரில் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள் கடத்தி வந்த மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் போதை பழக்கம் அதிகமாகி வருவதை தொடர்ந்து, அதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதை தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கண்ணுார் மாவட்டம், கூட்டுப்புழா பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது, காரின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த, 18 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. காரில் இருந்த கண்ணுார் வளப்பட்டணம் பகுதியை சேர்ந்த சமீர், 24, கைது செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகரான இவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

