/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தண்டவாளத்தில் மாட்டு தலை: ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு
/
தண்டவாளத்தில் மாட்டு தலை: ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு
தண்டவாளத்தில் மாட்டு தலை: ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு
தண்டவாளத்தில் மாட்டு தலை: ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு
UPDATED : பிப் 22, 2024 10:20 AM
ADDED : பிப் 22, 2024 02:43 AM

நாகர்கோவில்: குஜராத் மாநிலம், காந்தி தாமிலிருந்து பிப்., 19ல் புறப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது.
பார்வதிபுரம் ரயில்வே கேட்டை கடந்து, பாலத்தின் அடியில் சென்ற போது தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டுள்ளதை கவனித்த பைலட், ரயிலின் வேகத்தை குறைத்தார்.
எனினும் கற்கள் மீது ரயில் மோதியதால் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால் 15 நிமிடம் அந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டு புறப்பட்டு சென்றது. பாறாங்கற்களுடன் இறந்து போன மாட்டின் தலை எலும்பு கூடு போன்றவற்றை வைத்திருந்ததால், சதிவேலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.
கல்லில் மோதி ரயில் நின்ற சிறிது நேரத்தில் சிலர் அப்பகுதியில் உள்ள புதரில் இருந்து வெளியே வந்து பைக்கில் தப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
எஸ்.பி., சுந்தரவதனம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.