தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : பிப் 14, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார் ஏற்றி கான்ட்ராக்டர் கொலை

நாகர்கோவில்: கன்னியாகுமரி, தெங்கம்புதுாரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 49. இவருக்கு, தெற்கு கரும்பாட்டூரைச் சேர்ந்த விக்டர் ராஜாதாஸ், 46, என்பவர், 1 லட்சத்து 2,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், விக்டர் ராஜாதாசின் செட்டிகுளம் எலக்ட்ரானிக் கடைக்குச் சென்று, ஜெயக்குமார், அவரது அண்ணன், கட்டட கான்ட்ராக்டரான விஜயகுமார், பணத்தை திருப்பி கேட்டனர். அப்போது, திடீரென தன் காரால், இருவர் மீதும் மோதிவிட்டு, விக்டர் ராஜாதாஸ் நிற்காமல் சென்றார். இதில், விஜயகுமார் சம்பவ இடத்தில் இறந்தார்.

இளம்பெண் கொன்று எரிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த, சுங்கான்கடை அம்பேத்கர் நகர் அருகே, மனித எலும்பு கிடப்பதாக, இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், முழுமையாக எரிந்த நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டனர். கொலையான பெண்ணுக்கு, 20 வயது இருக்கலாம் என, தெரிகிறது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவியை கொன்றவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே, அணைக்கரை பிரதான சாலையை சேர்ந்தவர் அன்பரசன், 38. மனைவி அகிலா, 28. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அன்பரசன், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, துாங்கிக்கொண்டிருந்த அகிலா தலையில், குழவி கல்லை போட்டு கொலை செய்தார். திருப்பனந்தாள் போலீசார், அன்பரசனை கைது செய்தனர்.

ரவுடி சிகிச்சை பலனின்றி சாவு

விழுப்புரம்: விழுப்புரம், கமலா நகரை சேர்ந்த ரவுடி கதிரவன், 40, என்பவருக்கும், விழுப்புரம், விராட்டிக்குப்பத்தை சேர்ந்த மேகநாதன், 44, அன்பு, 40, ஆகியோருக்கும் பிப்., 9ல் ஏற்பட்ட தகராறில், கிரைண்டர் குழவி கல்லால் அடித்ததில், கதிரவன் படுகாயமடைந்தார். சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார்.

கட்டட மேஸ்திரி கொலை

வேலுார்: வேலுார், வ.உ.சி., நகரை சேர்ந்த கட்டட மேஸ்திரி ராமு, 43, நேற்று முன்தினம் காலை, அப்பகுதி சாலையோரம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். சத்துவாச்சாரி போலீசார், வேலுார், ஓட்டேரியை சேர்ந்த ஏ.சி., மெக்கானிக் சாலமன், 26, என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், 11ம் தேதி இரவு, வ.உ.சி., நகருக்கு மதுபோதையில் வந்த சாலமனை, ராமு திட்டியதால், கல்லால் அடித்து, ராமுவை கொன்றது தெரிந்தது.

பனியன் தொழிலாளி கொலை

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சூளக்கல் தோட்ட பகுதியில், நேற்று முன்தினம் டொமினிக் சகாயராஜ், 51, என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர், அவிநாசி, சேவூர் ரோடு மாருதி நகரில் தங்கி, திருப்பூரிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தது தெரிந்தது.

போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பாரில், மது வாங்க பணம் கேட்டு, டொமினிக் சகாயராஜ் தராததால், அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் ஆனந்தன், 35, அவரது நண்பர் சரவணன், 26, ஆகியோர், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரிந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us