ADDED : ஜூன் 30, 2026 05:01 AM
க ன் னியாகுமரி மாவட்டம், கண்ணம்பிவிளையைச் சேர்ந்தவர் லிங்கசாமி, 48. இவரது நண்பர் சிங்கம், 60. தொழிலாளர்களான இருவரும், நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த வேறு இருவருடன் மது அருந்தினர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், லிங்கசாமி, சிங்கத்தை, அவர்கள் இருவரும் கற்களால் தாக்கி கொலை செய்தனர். சந்தேக நபர்கள் இருவரிடம், ஈத்தாமொழி போலீசார் விசாரிக்கின்றன ர்.
சி வகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் சரவணகுமார், 35. மதுரையைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன், 40. இவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே, கட்டுமான பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், மது அருந்தியபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரவில், சரவணகுமார் துாங்கி கொண்டிருந்த போது, அவரது தலையில் கல்லை போட்டு, தங்கபாண்டியன் கொன்றார். அவரை, சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர்.
ம து ரை மாவட்டம், கல்புளிச்சான்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் சித்திக், 24, சித்தார்த், 28. இவர்கள், 2024ல், செங்குளத்தைச் சேர்ந்த முத்தையா, 23, என்பவரை கத்தியால் குத்தி கொன்றனர். பின், ஜாமினில் வந்த சித்திக், நேற்று முன்தினம் இரவு, குளத்துப்பட்டி அருகே இறந்து கிடந்தார். 'முத்தையா கொலைக்கு, பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம்' என, விக்கிரமங்கலம் போலீசார் கூறினர்.
தி ண்டுக்கல் மாவட் டம், பழனி யைச் சேர்ந்தவர் பிரபாகரன், 33; கொத்தனார். இவரது மனைவி ரூபி, 28. தம்பதிக்கு மகன்கள் ரியாஸ், 7, நாகராஜ் 3. மனைவி நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம், மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரபாகரன், மனைவி, மகன்களுக்கு விஷம் கொடுத்து, குடிக்க சொன்னார். மனைவியும், மூத்த மகனும் மறுக்கவே, குழந்தை நாகராஜுக்கு, வலுக்கட்டாயமாக விஷத்தை வாயில் ஊற்றியதில், குழந்தை இறந்தது. பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
