ADDED : ஏப் 10, 2025 01:31 AM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்:நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சிங் 52. பல் டாக்டரான இவர் கடந்த 18 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தார். திருமணம் ஆகவில்லை. அருண்சிங்கின் சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அருண் சிங் சென்னையிலிருந்து நாகர்கோவில் வந்து நாகர்கோவில் நீதிமன்றம் எதிரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இது பற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் போலீசார் கதவை உடைத்து பார்த்த போது சோபாவில் இறந்த நிலையில் காணப்பட்டார். அழுகிய நிலையில் காணப்பட்ட அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருண் சிங்கின் அண்ணி மினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
