/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கரடி தாக்கியதில் தந்தை, மகன் காயம்
/
கரடி தாக்கியதில் தந்தை, மகன் காயம்
ADDED : பிப் 20, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே தோட்ட மலையை சேர்ந்தவர் ராமையன் காணி 75. மகன் விஜயகுமார் 35. இருவரும் நேற்று மாலை மலையோர பகுதிகளில் நல்ல மிளகு பறித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கரடி இவர்கள் இரண்டு பேரையும் தாக்கியதில் இருவருக்கும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் வனத்துறையினர் விசாரித்தனர்.

