/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
இன்ஸ்டா காதலன் வீட்டுக்கு சென்ற மகளை மீட்ட தந்தை
/
இன்ஸ்டா காதலன் வீட்டுக்கு சென்ற மகளை மீட்ட தந்தை
ADDED : ஜன 11, 2025 01:48 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நள்ளிரவு பெற்றோரை ஏமாற்றி இன்ஸ்டாகிராம் காதலன் வீட்டுக்குச் சென்ற சிறுமியை அதிகாலையில் தந்தை மீட்டார். காதலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இம்மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான மரம் ஏறும் தொழிலாளியின் 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வுக்கு பின் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். இன்ஸ்டாகிராம் மூலம் பரைகோட்டைச் சேர்ந்த ஐஜின் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பல மணி நேரம் இருவரும் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தன் வீட்டில் யாரும் இல்லை என்றும், வீட்டுக்கு வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் ஐஜின் கூறினார்.
இதையடுத்து பெற்றோர் துாங்கியதும் மாணவி காதலனுடன் அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு ஒரு அறையில் இருவரும் இருந்துள்ளனர். அதிகாலை 4:00 மணிக்கு தொழிலாளி மகளை காணாததால் நேராக காதலன் வீட்டுக்கு சென்றார். கதவை திறந்த போது தந்தை நிற்பதை கண்டு அதிர்ச்சியுற்ற மாணவி ஓட முயன்றார். அவரை தந்தை மடக்கி பிடித்தார். ஐஜின் தப்பி விட்டார்.
காதலன் தன்னை ஏமாற்றி அழைத்து வந்து அறையில் வைத்து சில்மிஷம் செய்ததாக பின் சிறுமி கூறினார். இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். ஐஜின் மீது போச்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

