/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவர் கைது
/
மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவர் கைது
ADDED : ஜன 30, 2025 02:33 AM
நாகர்கோவில்:நாகர்கோவிலில் குடும்ப பிரச்னையில் மனைவியை ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சோழராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் 39. மெக்கானிக். மனைவி சாந்தகுமாரி 29. இவர் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக சாந்தகுமாரி வேப்பமூடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கிருஷ்ணகுமார் தாக்க முயன்றார். தப்பி ஓட முயன்ற சாந்தகுமாரியை கிருஷ்ணகுமார் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கிருஷ்ணகுமாரை பிடித்து கோட்டாறு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகவும், இதனால் சாந்தகுமாரி தனது தாய் வீட்டில் இருந்து வேலைக்கு வந்ததாகவும் தெரியவந்தது.
கிருஷ்ணகுமார் மீது பெண் வன்கொடுமை சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

