/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சுற்றுலா பயணிகள் வருகை குமரியில் அதிகரிப்பு
/
சுற்றுலா பயணிகள் வருகை குமரியில் அதிகரிப்பு
ADDED : பிப் 16, 2025 02:21 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் நடுவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்ட பின்னர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்த வெள்ளி விழாவை ஒட்டி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு டிச.31-ல் முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் எளிதாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று திரும்புகின்றனர். இப்பாலம் திறக்கப்பட்ட நிலையில் விடுமுறைநாட்களில் அவர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக வெள்ளி மாலை முதல் ஞாயிறு மாலை வரை கன்னியாகுமரியில் அதிக கூட்டம் காணப்படுகிறது. பூம்புகார் போக்குவரத்து கழக படகு சேவை காலை 8:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. ஆனால் காலை 6:00 மணி முதல் பயணிகள்நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
படகு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பின்னர்2 மணி நேரம் காத்து நின்று தான் டிக்கெட் எடுத்து செல்ல முடிவதாக தெரிவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முக்கடல் சங்கமமான திருவேணியில் அதிகமானோர் கடலில் குளிக்கின்றனர்.

