/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு
/
மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு
மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு
மாத்துார் தொட்டி பாலம் அருகே காமராஜர் பட கல்வெட்டு உடைப்பு
ADDED : பிப் 12, 2025 01:35 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்துார் தொட்டி பாலத்தில் காமராஜர் படத்துடன் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைக்கப்பட்டது.
மாத்துாரில் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்ல காமராஜர் முதல்வராக இருந்தபோது தொட்டிப்பாலம் கட்டப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 115 அடி உயரத்தில் 28 துாண்கள் அமைக்கப்பட்டு அதில் ஏழரை அடி அகலத்தில் ஏழு அடி உயரத்திலான தொட்டிகளை இணைத்து கட்டப்பட்ட பாலம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுமக்கள் இதில் நடந்து சென்று பார்வையிட சிறிய பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே மிக நீளமான பாலமாக கருதப்படுகிறது.
கணியான் பாறை மற்றும் கூட்டு வாயு பாறை என இரண்டு மலைகளை இணைத்து இது அமைக்கப்பட்டது. 1963ல் பணி தொடங்கப்பட்டு 1969ல் நிறைவு செய்யப்பட்டது. வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் இதன் வழியாக செல்லும்.
பாலத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுச்சீட்டு கொடுக்கும் பகுதியில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதில் காமராஜர் படமும் அதன் கீழே பாலத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி விபரங்களும் பொறிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இந்த கல்வெட்டை உடைத்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

