/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
இன்ஜி.,யிடம் பெண் குரலில் பேசி மோசடி செய்தவர் கைது
/
இன்ஜி.,யிடம் பெண் குரலில் பேசி மோசடி செய்தவர் கைது
இன்ஜி.,யிடம் பெண் குரலில் பேசி மோசடி செய்தவர் கைது
இன்ஜி.,யிடம் பெண் குரலில் பேசி மோசடி செய்தவர் கைது
ADDED : ஏப் 13, 2025 03:41 AM
நாகர்கோவில்: பெண் குரலில் பேசி, குமரி மாவட்ட இன்ஜினியரிடம், 24.19 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஹைதராபாத் இளைஞரை போலீசார் கைதனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் திருமணத்துக்காக, மொபைல் போன் செயலிகள் மூலம் பெண் தேடினார். அதில் ஒன்றில் வெளியாகி இருந்த பெண்ணின் புகைப்படமும், அதிலிருந்த விபரங்களும் பிடித்திருந்ததை தொடர்ந்து, தன் விபரங்களை பதிவு செய்தார்.
பின், அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பெண் குரலில் பேசியவர், தனக்கும் தென்தாமரைக்குளம் இன்ஜினியரை பிடித்துள்ளதாக கூறினார்.
இதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் மொபைல் போனில் பல முறை பேசினர். பெண் குரலில் பேசியவர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றார். அதை நம்பிய இன்ஜினியர் பல தவணைகளாக 24 லட்சம் ரூபாயை, அந்த நபர் கூறிய முகவரிக்கு அனுப்பினார்.
அதன் பிறகு, அந்த பெண் குரல் ஒலிக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த நபர், குமரி மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து அந்த அழைப்பு வந்தது தெரிந்தது.
ஐதராபாத் சென்ற போலீசார், சுதாகர், 26, என்பவரை கைது செய்தனர். அவரை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்திய பின், சிறையில் அடைத்தனர்.

