/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
டாக்டர் வீட்டில் 90 சவரன் நகை திருடியவர் கைது
/
டாக்டர் வீட்டில் 90 சவரன் நகை திருடியவர் கைது
ADDED : ஜன 27, 2024 02:21 AM
நாகர்கோவில்:குமரி மாவட்டம் நாகர்கோவில் பிளசன்ட் நகரை சேர்ந்தவர் டாக்டர் கலைக்குமார். இவர், ஜன.7ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருநெல்வேலி சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன.
வீட்டில் இருந்த 90 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கேரள மாநிலம் பலராமபுரத்தை சேர்ந்த ஆதித்கோபன் என்ற முத்துகிருஷ்ணன், 30, என்பவர் என தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

