/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கடன் பிரச்னையில் தாய், மகன் தற்கொலை
/
கடன் பிரச்னையில் தாய், மகன் தற்கொலை
ADDED : ஜன 08, 2025 01:26 AM
நாகர்கோவில்:குமரி அருகே கடன் தவணையை திரும்ப செலுத்த முடியாத தாய் ,- மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு கோவில் விளையைச் சேர்ந்தவர் தங்கராஜ் 63. மனைவி அமுத கலா 50. இவர்களது மகள் சுமாராணிக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் மெல்பின் ராஜ் 23. பெந்தகோஸ்தே சபை போதகர்.
சுமாராணி திருமணத்திற்கும், புதிய வீடு கட்டுவதற்கும் வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளனர். ஆனால் கடன் தவணையை முறையாக செலுத்த முடியாததால் வங்கியில் இருந்து நெருக்கடி கொடுத்த நிலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து அமுதகலா மற்றும் மெல்பின் ராஜ் தற்கொலை செய்து கொண்டனர்.
தந்தை தங்கராஜுக்கும் இந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவர் குடிக்க மறுத்ததால் உயிர் தப்பினார். தக்கலை போலீசார் விசாரித்தனர்.