/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கழிவுகளுடன் வந்த கேரள வாகனங்கள் பறிமுதல் ஒன்பது பேர் கைது
/
கழிவுகளுடன் வந்த கேரள வாகனங்கள் பறிமுதல் ஒன்பது பேர் கைது
கழிவுகளுடன் வந்த கேரள வாகனங்கள் பறிமுதல் ஒன்பது பேர் கைது
கழிவுகளுடன் வந்த கேரள வாகனங்கள் பறிமுதல் ஒன்பது பேர் கைது
ADDED : ஜன 10, 2025 02:42 AM
நாகர்கோவில்,:கேரளாவில் இருந்து கழிவு பொருட்களுடன் வந்த ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டுவதை தடுப்பதற்காக எல்லை சோதனை சாவடிகளில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடியை தாண்டி கழிவு பொருள் வாகனம் வந்தால் பணியில் இருப்பவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பனச்சமூடு சோதனை சாவடியில் ஐந்து வாகனங்களில் கழிவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
டிரைவர் மற்றும் கிளீனர்களான ஐயப்பன் 33, ஷானு 24, கனகராஜ் 55, கிஷோர் குமார் 29, சாகுல் ஹமீது 63, சின்டோ 25, பிஜு 29 ,சுதர்சன் 23, தவ்ரக் 30 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பன்றி பண்ணைகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய ஆலோசனை நடக்கிறது.

