/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் அணுக்கனிம சுரங்கம்: அக்., 1ல் கருத்துக் கேட்பு
/
குமரியில் அணுக்கனிம சுரங்கம்: அக்., 1ல் கருத்துக் கேட்பு
குமரியில் அணுக்கனிம சுரங்கம்: அக்., 1ல் கருத்துக் கேட்பு
குமரியில் அணுக்கனிம சுரங்கம்: அக்., 1ல் கருத்துக் கேட்பு
ADDED : செப் 19, 2024 05:23 PM

நாகர்கோயில்: கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அக்., 1ல் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்துக்கு உட்பட்ட 5 கிராமங்களை உள்ளடக்கிய 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைத்து, அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.இ.எல்., நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக வரும் அக்., 1ல் பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. அன்றைய கூட்டத்தில் மீனவ அமைப்புகள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய முடிவு செய்துள்ளன.