/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பண மோசடி வழக்கில் கைதானவரின் லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் போலீஸ் விசாரணை

ADDED : டிச 02, 2025 04:08 AM
நாகர்கோவில்: வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் பிரபாகரன் 37. இவர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே திருப்பதிசாரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 25 லட்ச ரூபாய் வாங்கினார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இது பற்றி அந்தப் பெண் கன்னியாகுமரி எஸ்.பி., ஸ்டாலினிடம் புகார் அளித்தார்.
ஆரல்வாய்மொழி போலீசார், ராணிப்பேட்டையில் பதுங்கி இருந்த பிரபாகரனை கைது செய்தனர். விசாரணையில் அவர் சென்னை, அரக்கோணம், மதுரை உள்ளிட்ட இடங்களில் பலரிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த ஒரு லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன.
இந்த வீடியோக்கள் வேலைக்காக பணம் கொடுத்த பெண்களை ஏமாற்றி எடுத்ததா என்பது பற்றி போலீசார் விசாரணை செய்கின்றனர். இது தொடர்பாக பணம் கொடுத்து ஏமாந்த பெண்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரபாகரன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப் பட்டார்.