/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குப்பை கிடங்கில் பற்றிய தீ அணைக்க வீரர்கள் போராட்டம்
/
குப்பை கிடங்கில் பற்றிய தீ அணைக்க வீரர்கள் போராட்டம்
குப்பை கிடங்கில் பற்றிய தீ அணைக்க வீரர்கள் போராட்டம்
குப்பை கிடங்கில் பற்றிய தீ அணைக்க வீரர்கள் போராட்டம்
ADDED : பிப் 11, 2025 05:24 AM
நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில் பீச் ரோடு ஜங்ஷன் அருகே, வலம்புரிவிளையில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில், 7ம் தேதி காலை தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ வேகமாகப் பரவி, அப்பகுதி முழுக்க புகை மண்டலம் சூழ்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள், மூன்று நாட்களாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கலெக்டர் அழகுமீனா நடவடிக்கையால் துாத்துக்குடி, கழுகுமலை, சேரன்மகாதேவி, ஆலங்குளம், திருநெல்வேலி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து மேலும் ஏழு தீயணைப்பு வாகனங்கள் நேற்று காலை வரவழைக்கப்பட்டன.
இன்று மாலைக்குள் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நேற்று, பெரும்பகுதி தீ அணைக்கப்பட்டதால், அப்பகுதியில் புகை குறைந்துள்ளது. புகை பாதிப்பால் வீடுகளை காலி செய்தவர்கள் இன்னும் திரும்பவில்லை.

