/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நான்கு வழி சாலை பணியை 2026 ஏப்ரலில் முடிக்க திட்டம்
/
நான்கு வழி சாலை பணியை 2026 ஏப்ரலில் முடிக்க திட்டம்
நான்கு வழி சாலை பணியை 2026 ஏப்ரலில் முடிக்க திட்டம்
நான்கு வழி சாலை பணியை 2026 ஏப்ரலில் முடிக்க திட்டம்
ADDED : அக் 25, 2025 12:59 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி --- திருவனந்தபுரம் நான்கு வழி சாலைப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிக்கப்பட்டு விடும் என்று விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் நடந்த வளர்ச்சி குழு கூட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் விஜய் வசந்த் எம். பி. தலைமையில் நடந்தது. கலெக்டர் அழகுமீனா, எம்.எல்.ஏ.,தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் விஜய் வசந்த் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கன்னியாகுமரி --- திருவனந்தபுரம் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. சில கிராமங்களுக்கு செல்வதற்கு இணைப்பு சாலை வசதி இல்லை. இதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசாரிப்பள்ளம் அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் என்ன நிலையில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேசியதாவது:
கன்னியாகுமரி --- திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. 55 கிலோ மீட்டர் துாரச் சாலையில் 30 கிலோ மீட்டருக்கான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. 2026 ஏப்ரல் மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முன் வருவதில்லை என மற்றொரு கேள்விக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.

