/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது
/
கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது
ADDED : ஏப் 29, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்: நாகையில் பதுக்கி வைத்திருந்த, 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நாகை, வெளிப்பாளையம் போலீசார் சோதனை நடத்தி, வெளிப்பாளையம், பச்சை பிள்ளையார்கோவில் தெருவில், ரேவதி, 37, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, கோவில்கடம்பனுார் பிரகாஷ், 32, அவரது மனைவி ரேணுகா, 30, ஆகியோரை கைது செய்து, தொடர்புடைய ரிக்கி பாண்டி, அருள்பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

