ADDED : ஏப் 03, 2025 02:34 AM
நாகர்கோவில்:ஆன்லைன் செயலியில் பழகி வீட்டுக்கு வரவழைத்து பணம் மற்றும் நகைகளை பறித்த மூன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கிரிண்டர் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு ஆண்களை வரவழைக்கின்றனர். நேரில் வந்த பின் அவர்களிடம் இருந்து பணத்தையும், நகைகளையும் பறித்துக்கொண்டு அனுப்பி விடுகின்றனர். வெளியே தெரிந்தால் அசிங்கம் என பலரும் புகார் கொடுக்க தயங்குகின்றனர்.
இதை பயன்படுத்தி பலரையும் வரவழைத்து பணம், நகை பறித்ததாக கன்னியாகுமரி மாவட்டம் புன்னை நகரை சேர்ந்த ஆன்றோ ததேயு மீசல் 23, குலசேகரபுரம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த சூர்யா 24,எறும்புகாடு, தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்த அஜெய் 25 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 15க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

