ADDED : ஏப் 19, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் போதிய அனுமதி பெறாமல் த.மா.கா., வேட்பாளர் பிரசாரத்திற்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிள்ளியூர் தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் த.மா.கா., சார்பாக நிவின் சைமன் போட்டியிடுகிறார். கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் அவரது பிரசார வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது போதிய அனுமதி சீட்டு பெறாமல் வேறு வாகனத்தின் அனுமதி சான்றை வைத்து ஒலிபெருக்கி மூலம் வாக்கு சேகரித்தது தெரியவந்தது. டிரைவர் ஜெகனிடம் விசாரித்த போது வேறு வாகனத்தின் அனுமதி சீட்டை வைத்து பிரசாரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
