ADDED : மார் 13, 2026 07:59 PM

நாகர்கோவில்: திருவனந்தபுரம் சிறையில் இருந்து, ஜாமினில் வெளியேறி, நகை திருட்டில் ஈடுபட்டவர் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோனி பிரசாத். இவரின் வீட்டில், 3 சவரன் நகை, 10,000 ரூபாய் திருடப்பட்டது. 'சிசிடிவி' பதிவுகளை கைப்பற்றி, விசாரணை நடத்திய மார்த்தாண்டம் போலீசார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கருப்பை சுதீர், 40, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவருடன் சேர்ந்து, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. சிறையில் பழக்கம் ஏற்பட்டு, இவர்கள் இருவரும் ஜாமினில் வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருடிய நகைகளை, பாபுவின் தம்பி சுந்தரன் வாயிலாக, நகைக்கடையில் விற்று, பணம் பெற்றுள்ளனர். பாபுவை தேடும் போலீசார், சுந்தரனை கைது செய்தனர்.
