/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பஸ்சில் திருட முயற்சி இரு பெண்கள் கைது
/
பஸ்சில் திருட முயற்சி இரு பெண்கள் கைது
ADDED : ஏப் 04, 2025 02:48 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகே பஸ்சில் பெண்ணிடம் பணத்தை திருட முயன்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுஜி 38. ஆசாரிப்பள்ளத்தில் உள்ள ஒரு வங்கியில் குடும்பத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து ரூ.70 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஈத்தாமொழி சந்திப்புக்கு பஸ்சில் வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்தி சுஜி பயணிகளுக்கு இடையில் இருந்து வெளியே வந்தபோது அவரது பேக்கை திறந்து பணத்தை எடுக்க முயற்சிப்பதை உணர்ந்து சத்தமிட்டார்.
அதை கண்ட சக பயணிகள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இரு பெண்களையும் மடக்கி பிடித்து ஈத்தாமொழி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த மாதப்பன் மனைவி வெள்ளச்சி 43, மணி மனைவி ஜோதி 35, என தெரியவந்தது. இரு பெண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை சிறையில் அடைக்கப்பட்டனர்.

