/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்
/
கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்
ADDED : நவ 25, 2025 11:48 PM
நாகர்கோவில்: கலெக்டர் தரக்குறைவாக பேசுவதாக கூறி, குமரி கலெக்டர் அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்திய திடீர் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்களை, மாவட்ட கலெக்டர் அழகு மீனா தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கலெக்டர் அறையை ஒட்டி உள்ள வராண்டாவில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். கலெக்டர் நேரடியாக வந்து பேச்சு நடத்த வேண்டும் என்று கூறியும், போராட்டத்தை கைவிட மறுத்தனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலெக்டர் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
ஒட்டுமொத்த வி.ஏ.ஓ.,க்களும் திரண்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

