/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'அடிக்கடி அபராதம் விதித்ததால் போலீஸ் வாகனம் மீது கல் வீசினோம்'
/
'அடிக்கடி அபராதம் விதித்ததால் போலீஸ் வாகனம் மீது கல் வீசினோம்'
'அடிக்கடி அபராதம் விதித்ததால் போலீஸ் வாகனம் மீது கல் வீசினோம்'
'அடிக்கடி அபராதம் விதித்ததால் போலீஸ் வாகனம் மீது கல் வீசினோம்'
ADDED : ஜன 07, 2025 12:24 AM
நாகர்கோவில்; அடிக்கடி அபராதம் விதித்த ஆத்திரத்தில் ஏ.எஸ்.பி. வாகனத்தில் கல் வீசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாகர்கோவில் ஏ.எஸ். பி. லலித்குமார். ஜன.4  இரவு இவர் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் ரோந்து வந்து கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் இவரது வாகனத்தின் மீது கல் வீசினர். இதில் கண்ணாடி உடைந்தது.
மணலிக்கரையை சேர்ந்த சார்லி ஜோஸ் 26, இவரது  தம்பி கார்லின் ஜோஸ் 24, குருந்தன்கோடு மாவிளையைச் சேர்ந்த ஜெனிஸ் 20, வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணா 19,  ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அடிக்கடி வாகன சோதனை நடத்தி அபராதம் வசூலித்த ஆத்திரத்தில் குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கண்டதும் கல் வீசியதாக  தெரிவித்துள்ளனர். சார்லின் ஜோசின் இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.