/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மயக்கமருந்து கொடுத்து பெண்ணிடம் நகை திருட்டு
/
மயக்கமருந்து கொடுத்து பெண்ணிடம் நகை திருட்டு
ADDED : ஜூன் 07, 2025 02:32 AM
நாகர்கோவில்:முருங்கைக்காய் விற்பது போல் வந்து குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தம்பதியிடம் நகை பறித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ராஜாவூரை சேர்ந்தவர் அந்தோணி முத்து 58. விவசாயி. மனைவி எமிலெட் 55. ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் திருமணமான மகள் உள்ளூரிலேயே வசிக்கிறார்.
நேற்று முன்தினம் மதியம் மகள் தனது பெற்றோருக்கு பலமுறை அனைத்தும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகள் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது பெற்றோர் இருவரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களை மயிலாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எமிலெட் அஞ்சு கிராமம் போலீசில் புகார் செய்தார். முதற்கட்ட விசாரணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முருங்கைக்காய் விற்பனைக்காக வந்துள்ளார். அவர் அந்தோணி - எமிலெட் தம்பதியிடம் அன்பாக பேசி பின்னர் தான் கொண்டு வந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த சிறந்த நேரத்தில் இருவரும் மயங்கி உள்ளனர்.
பின்னர் அந்த பெண் எமிலெட்டின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்க நகையை எடுத்துச் சென்று விட்டார். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.