/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
காதலனை கைப்பிடித்த போட்டோவை நிச்சயித்தவருக்கு அனுப்பிய பெண்
/
காதலனை கைப்பிடித்த போட்டோவை நிச்சயித்தவருக்கு அனுப்பிய பெண்
காதலனை கைப்பிடித்த போட்டோவை நிச்சயித்தவருக்கு அனுப்பிய பெண்
காதலனை கைப்பிடித்த போட்டோவை நிச்சயித்தவருக்கு அனுப்பிய பெண்
ADDED : ஜூலை 08, 2025 04:50 AM

நாகர்கோவில்: நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், வீட்டிலிருந்து மாயமாகி காதலனுடன் திருமணம் செய்த பெண், திருமண போட்டோவை நிச்சயிக்கப்பட்ட இளைஞருக்கும், தன் வீட்டாருக்கும் அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் ஷைனி பிரியா 30; கோவையில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இரணியல் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு ஷைனி சம்மதம் தெரிவித்து, ஏற்பாடுகள் நடைபெற்றன.
அழைப்பிதழ் கொடுப்பது முதல் திருமண வேலைகள் அனைத்திலும் பங்கு பெற்ற ஷைனி பிரியா, ஜூலை 5ல் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து, தக்கலை போலீசில் சகோதரர் சஞ்சீவ் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று காலை ஷைனியின் பெற்றோர், உறவினர்களுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞருக்கும், காதலனுடன் மணக்கோணத்தில் இருக்கும் போட்டோவை ஷைனி மொபைல் போனில் அனுப்பி வைத்தார்.

