/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'இன்ஸ்டா' காதலனை தேடி சென்னை சென்ற பெண் மாயம்
/
'இன்ஸ்டா' காதலனை தேடி சென்னை சென்ற பெண் மாயம்
ADDED : அக் 13, 2025 11:42 PM
நாகர்கோவில்: 'இன்ஸ்டா' காதலனை பார்ப்பதற்கு குமரியிலிருந்து சென்னை சென்ற பெண் மாயமானது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே காட்டாத்துறையை சேர்ந்தவர் சிந்து, 23. இவரது கணவர் நாகர்கோவில் அருகே வடசேரி வாத்தியார் விளையை சேர்ந்த கலையரசன். குடும்ப தகராறு காரணமாக கணவர் பிரிந்து சென்ற நிலையில், மாமியாருடன் தனியாக வசித்தார்.
அக்., 8 மாலை சென்னை செல்வதாக கூறி சிந்து சென்றார். மறுநாள் காலை தன் தங்கையை மொபைல் போனில் அழைத்த சிந்து, தன்னை காப்பாற்றும்படியும், உயிருக்கு ஆபத்தாகி விட்டதாகவும் கூறியுள்ளார். பின், அவரது மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
சிந்துவின் தாய் சாந்தி நேசமணி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த ஒருவருடன் சிந்து இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக தான் அவர் சென்னை சென்றதாக தெரியவந்துள்ளது. அவரது மொபைல் போன் எந்த இடத்தில், 'ஸ்விட்ச் ஆப்' ஆனது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.