தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர்- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் பணி தொடக்கம்

கரூர்- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் பணி தொடக்கம்

கரூர்- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் பணி தொடக்கம்


ADDED : பிப் 20, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் பணி தொடக்கம்

கரூர்:கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.கரூரில் இருந்து, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுபாளையம், மண்-மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங்கோவில் வளைவு, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன. அந்த சாலையை கடந்து செல்லும் போது, விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம், அந்த பகுதிகளில் சாலை மறி-யலில் ஈடுபடுவர். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

விபத்து ஏற்படும் பகுதிகளில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு, மண்மங்கலம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் பணி தொடங்கவுள்ளது.

இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது:திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதில், கோடங்கிபட்டியில், 21.50 கோடி ரூபாய் மதிப்பில், 5.5 மீட்டர் உயரம், 15 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலம் பணி தொடங்குவதற்கு முன், சாலையில் வாகனங்கள் தடையின்றி சென்று வருவதற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும். இந்த பாலம் பணிகள் ஓராண்டுக்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டு விடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us