தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயார் அவுரி செடி உழும் பணி தீவிரம்

சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயார் அவுரி செடி உழும் பணி தீவிரம்

சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயார் அவுரி செடி உழும் பணி தீவிரம்


ADDED : அக் 04, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயார்

அவுரி செடி உழும் பணி தீவிரம்

கரூர், அக். 4-

மண்ணை வளப்படுத்தும் நோக்கில் அவுரி செடி பயிரிட்டுள்ள விவசாயிகள், சம்பா சாகுபடிக்கு ஏதுவாக உழும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு ஜூலை, 28 முதல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து கர்நாடகவில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டே உள்ளது. தற்போது சம்பா சாகுபடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று பாசன பகுதிகளில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் பயிரிடுவதற்கு முன்னதாக கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வளம் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கை உரம் தாவரமான அவுரி செடி வளர்ப்பு சாகுபடி அதிகரித்துள்ளது.

மண் வளம் பாதுகாக்க இயற்கை உர தாவரமான அவுரி செடி வகை நிலங்களில் தெளிக்கப்பட்டு, அவை நன்றாக வளர்ந்து உள்ளன. தற்போது அடி உரமாக மண்ணுடன் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் நெல் சாகுபடி பயிருக்கு ரசாயனம் உரமான யூரியா தேவை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. இயற்கை உரமான அவுரி செடி மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கிறது. இந்த இயற்கை விவசாயம் மூலம் நெல் மகசூல் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us