தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் நிறுத்தம் ஆவேச மக்கள்; சாலை மறியலால் 'டிராபிக்'

ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் நிறுத்தம் ஆவேச மக்கள்; சாலை மறியலால் 'டிராபிக்'

ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் நிறுத்தம் ஆவேச மக்கள்; சாலை மறியலால் 'டிராபிக்'


ADDED : டிச 10, 2024 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மோகனுார், டிச. 10-

ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் நிறுத்தியதால், ஆவேசமடைந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மோகனுார் - நாமக்கல் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, குமரிபாளையம் பஞ்.,க்கு உட்பட்ட கங்காநாயக்கன்பட்டியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு, தினமும், காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 6 மாதத்திற்கு முன், மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால், குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஒரு மின் மோட்டாரை கொண்டு, சொற்ப அளவில் குடிநீர் சப்ளை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை, 8:30 மணிக்கு, மோகனுார் - நாமக்கல் சாலை தோப்பூரில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

'பீக் ஹவர்' என்பதால், பள்ளி, கல்லுாரி செல்லும் வாகனங்கள், பஸ், லாரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் அலுவலர்கள் என பலரும், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்த தாசில்தார் மணிகண்டன், மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விரைந்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தனர். அதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். திடீர் மறியல் போராட்டம் காரணமாக, மோகனுார் - நாமக்கல் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us