/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளால் விபத்து அதிகரிப்பு

ADDED : ஜன 31, 2025 01:21 AM
கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளால் விபத்து அதிகரிப்பு
கரூர் :கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானா பகுதியில் நான்கு வழிகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, திண்டுக்கல், கோவை, நாமக்கல், மணப்பாறை போன்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், ரவுண்டானா வழியாக செல்கின்றன. இதேபோல இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக வாகனங்களை ஓட்டுவோர் பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.
இங்கு, வாகன ஓட்டிகள் சிக்னல் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருக்க வேண்டும். சிக்னல் மாறும் முன் வாகனங்களை இயக்கி செல்கின்றனர். எதிர்திசையில் வரும் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சிக்னலில் வாகனங்கள் வெள்ளை கோடு முன் நிறுத்த வேண்டும். இதை மதிக்காமல் வெள்ளை கோட்டை கடந்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த சிக்னலில் இடதுபுறம் செல்லும் வாகனங்களுக்கு வசதியாக பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளது.
சில வாகன ஓட்டிகள் பேரி கார்டு தாண்டி நிற்பதால், இடதுபுறம் செல்லும் வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் சிக்னல் விதிகளை மதிக்காமல் செல்வது, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது போன்ற விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.