/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 'ஹெல்மெட்' அணிந்து டூவீலரில் பேரணி
/
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 'ஹெல்மெட்' அணிந்து டூவீலரில் பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 'ஹெல்மெட்' அணிந்து டூவீலரில் பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 'ஹெல்மெட்' அணிந்து டூவீலரில் பேரணி
ADDED : ஜன 31, 2025 01:22 AM
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 'ஹெல்மெட்' அணிந்து டூவீலரில் பேரணி
குளித்தலை,:குளித்தலை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு  போலீசார் சார்பில், தேசிய   சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. குளித்தலை பெரியபாலத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர்கள் குளித்தலை உதயகுமார், தோகைமலை ஜெயராமன், மாயனுார் முருகேசன், போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் சரவணன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன், துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்கள் அனைவரும் சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக்கொண்டார். இந்த விழிப்புணர்வு பேரணி, பெரியபாலத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு தலைமை மருத்துவமனை வழியாக சுங்ககேட் வரை சென்று, நெடுஞ்சாலைத்துறை உபகோட்ட பொறியாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வழியாக  பஸ் ஸ்டாண்ட்  காந்தி சிலையில் நிறைவடைந்தது. இந்த டூவீலர் பேரணியில், அனைத்து ஸ்டேஷன் போலீசார், தனியார் பைக் வாகன ஏஜென்சி பணியாளர்கள், பொதுமக்கள், தலைக்கவசம் அணிந்து டூவீலரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, டி.எஸ்.பி.,  செந்தில்குமார், டூவீலர் ஓட்டும் பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். விபத்தில்லா மாவட்டமாக, கரூர் மாவட்டம் திகழ வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.