/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் அடையாள சின்னமான பள்ளி விடுதிஇடித்து விட்டு நீச்சல் குளம் கட்ட எதிர்ப்பு
/
கரூரில் அடையாள சின்னமான பள்ளி விடுதிஇடித்து விட்டு நீச்சல் குளம் கட்ட எதிர்ப்பு
கரூரில் அடையாள சின்னமான பள்ளி விடுதிஇடித்து விட்டு நீச்சல் குளம் கட்ட எதிர்ப்பு
கரூரில் அடையாள சின்னமான பள்ளி விடுதிஇடித்து விட்டு நீச்சல் குளம் கட்ட எதிர்ப்பு
ADDED : ஜன 31, 2025 01:22 AM
கரூரில் அடையாள சின்னமான பள்ளி விடுதிஇடித்து விட்டு நீச்சல் குளம் கட்ட எதிர்ப்பு
கரூர்:கரூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி அருகில், அடையாள சின்னமாக விளங்கும் அரசு பள்ளி விடுதியை இடித்து விட்டு, நீச்சல் குளம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரூர் நகரில் இயங்கி வருகிறது, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி. 1884-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, நூற்றாண்டைக் கடந்து, பாரம்பரியச் சின்னமாக நிற்கிறது. இந்தப் பள்ளியில் படித்தவர்கள் பலர் நல்ல நிலையில் உள்ளனர்.
தற்போது, 140 ஆண்டுகளை நடந்த மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு, தமிழக அரசு நுாற்றாண்டு விழா கொண்டாட உள்ளது. இந்நிலையில், கரூர் அடையாளமாக இருந்த மாநகராட்சி பள்ளி அருகில் இருக்கும், பழைய விடுதி கட்டடத்தை இடித்து விட்டு நீச்சல் குளம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து வக்கீல் நன்மாறன் கூறியதாவது:
கடந்த, 1921ம் ஆண்டு கரூர் நகராட்சி தலைவராக பெத்தாச்சி செட்டியார் இருந்த போது, சிதம்பரம் மாணவர் விடுதி கட்டப்பட்டது. இது கரூர் மாவட்டத்தில் உள்ள அடையாள சின்னங்களில் ஒன்றாகும். சுண்ணாம்பு, முட்டை, கடுக்காய், வெல்லம், செங்கல் என்று பலமாக கட்டப்பட்ட கட்டடம் அது. அது பெரிதாக சிதிலமடையவில்லை. தற்போது, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் முதல் தளத்தில் உள்ள ஓடு மற்றும் ஜன்னல் தான் சேதமடைந்துள்ளன.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம், 100 ஆண்டுகளை கடந்து விட்டதாக கூறி இடிக்க, கரூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அங்கு, நீச்சல் குளம் கட்ட மாதிரி வரைப்படம், மண் பரிசோதனை செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரி ஆய்வு அறிக்கையில் உறுதியற்ற தன்மை சான்று அடிப்படையில் இடிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் கட்டடம் பழுதடைந்து விட்டது என, இதே பொறியியல் கல்லுாரி அறிக்கை அளித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் வணிக வளாகம் கட்டடம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பள்ளியின் பாரம்பரிய சின்னமாக உள்ள கட்டடத்தை இப்படி இடித்து தரைமட்டமாக்க நினைப்பது கண்டிக்கதக்கது. இதற்காக சட்ட போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.இது குறித்து கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா கூறுகையில், ''கரூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி அருகில் உள்ள சிதம்பரம் விடுதி இடிக்க இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கவுன்சிலர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.

