தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல்விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல்விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல்விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : பிப் 01, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல்விளக்குகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கரூர்-ஈரோடு சாலை வழியாக ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட, மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்கின்றன. மேலும், ஆத்துார் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் செயல்படுவதால், ஈரோடு சாலை வடிவேல் நகர் முதல், ஆத்துார் பிரிவு வரை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சாலை விரிவாக்க பணிகள் நடந்தன. பிறகு, ஆத்துார் பிரிவில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, கம்பங்கள் போடப்பட்டு சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், சிக்னல் கம்பத்தில் உள்ள விளக்குகள் சரிவர, எரிவது இல்லை.

இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர்-ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவு பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது.

இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, புதிய விரிவாக்க சாலையில், சிக்னல் கம்பங்களில் உள்ள, விளக்குகள் எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us