தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்த வாலிபர் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்த வாலிபர் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்த வாலிபர் கைது


ADDED : மார் 13, 2025 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்த வாலிபர் கைது

கரூர்:கரூரில், அதிக வட்டி தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், பண மோசடி செய்த வாலிபரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கரூர், பாரதி நகரை சேர்ந்தவர் பால முருகன், 36, தனியார் நிறுவன ஊழியர். இவரிடம், பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துரை சேர்ந்த பிரபு, 41, என்பவர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி கிடைக்கும் என கடந்த, 2021ல் கூறியுள்ளார். அதை நம்பிய பாலமுருகன், பிரபு இயக்குனராக இருந்த தனியார் நிதி நிறுவனத்தில், 20 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளார். ஆனால், பிரபு கூறியபடி வட்டி தரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பாலமுருகன், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நிதி நிறுவன இயக்குனராக இருந்த பிரபுவை, நேற்று கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, கலைவாணன் என்பவரிடமும் பிரபு, 30 லட்ச ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளார் என, குற்றப்

பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.இதனால், பிரபுவின் வங்கி கணக்குகளை முடக்கவும், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us