/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்வினா-விடை, வங்கி புத்தகம் வழங்கல்
/
கரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்வினா-விடை, வங்கி புத்தகம் வழங்கல்
கரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்வினா-விடை, வங்கி புத்தகம் வழங்கல்
கரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்வினா-விடை, வங்கி புத்தகம் வழங்கல்
ADDED : ஜன 23, 2025 01:22 AM
கரூர், :கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வினா-விடை, வங்கி புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வழங்கினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியருக்கு வினா-விடை, வங்கி புத்தகங்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மேயர் கவிதா, துணை மேயர் சரணவன் உள்பட பலர் பங்கேற்றனர்.