கரூர் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா ஏற்பாடு தீவிரம்
கரூர் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா ஏற்பாடு தீவிரம்
ADDED : ஜன 24, 2025 01:14 AM
கரூர் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா ஏற்பாடு தீவிரம்
கரூர், :குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்காக, கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது.வரும், 26ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழா நடக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை, துாய்மைப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மைதானத்தின் ஓடுதளம் பகுதியில் பரவிக்கிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன.
மேலும் தேசிய கொடியேற்றும் பகுதியில் காணப்பட்ட புதர்கள் அகற்றப்பட்டு, அப்பகுதி சமன் செய்யப்பட்டன. விருந்தினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அமரும் வகையில், ஷாமியானா பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
