தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர்-கோவை சாலை சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்-கோவை சாலை சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்-கோவை சாலை சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : ஜன 25, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்-கோவை சாலை சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், :கரூர்-கோவை சாலையில் தனியார், அரசு பள்ளிக்கூடங்கள், ஓட்டல்கள், டீ கடைகள், கூட்டுறவு வங்கி மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கோவை சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், வேகத் தடை அமைக்கப்பட்டது.

தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலை, சேதமடைந்துள்ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் போக்கு வரத்து போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்து ஏற்படுகிறது.

எனவே, கரூர்-கோவை சாலை முனியப்பன் கோவில் அருகே, வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us