தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நிழற்கூடம் இல்லாத ஐந்து சாலை பிரிவுபொதுமக்கள் வெயிலில் கடும் அவதி

நிழற்கூடம் இல்லாத ஐந்து சாலை பிரிவுபொதுமக்கள் வெயிலில் கடும் அவதி

நிழற்கூடம் இல்லாத ஐந்து சாலை பிரிவுபொதுமக்கள் வெயிலில் கடும் அவதி


ADDED : பிப் 27, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிழற்கூடம் இல்லாத ஐந்து சாலை பிரிவுபொதுமக்கள் வெயிலில் கடும் அவதி

கரூர்:கரூர் அருகே ஐந்து சாலை பகுதியில், நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிப்படுகின்றனர்.

கரூர் அருகே உள்ள வாங்கல் பிரிவு மற்றும் பசுபதிபாளையம் சாலை, ஐந்து சாலை என அழைக்கப்படுகிறது. கரூர் அருகே வாங்கல், நெரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் ஐந்து சாலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும்.அதே போல், வாங்கல், நெரூர் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள், பசுபதிபாளையம் செல்ல, ஐந்து சாலை பிரிவில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். இதனால், ஐந்து சாலை பிரிவில், பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருப்பது வழக்கம்.ஆனால், ஐந்து சாலை பிரிவு பகுதியில் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டு மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், கரூர் ஐந்து சாலை பிரிவு பகுதியில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us