/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரகம்பட்டிக்கு அரசு கல்லுாரி வந்தாச்சு பஸ் ஸ்டாண்டை எதிர்பார்க்கும் மக்கள்

ADDED : பிப் 27, 2025 02:26 AM
தரகம்பட்டிக்கு அரசு கல்லுாரி வந்தாச்சு பஸ் ஸ்டாண்டை எதிர்பார்க்கும் மக்கள்
கரூர்:புதிய கட்டடத்தில், அரசு கலைக்கல்லுாரி செயல்பட துவங்கிய நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தரகம்பட்டியில் கட்டாயம் பஸ் ஸ்டாண்ட் கட்டவேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவின் தலைமையிடமாக, தரகம்பட்டி கிராம பஞ்சாயத்து உள்ளது. அங்கு தாலுகா அலுவலகம், கடவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வேளாண்மை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
நாள்தோறும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி, கரூர், குளித்தலை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், தரகம்பட்டியில் இருந்து திருச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், தரகம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், கடைவீதி பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை, டிரைவர்கள் இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால், கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது. அதை தவிர்க்க, தரகம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2020 கல்வியாண்டு முதல் தரகம்பட்டியில் அரசு கலைக் கல்லுாரி (இருபாலர்) துவக்கப்பட்டு தற்போது, 12.46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, புதிய கட்டடத்தில் செயல்பட துவங்கியுள்ளது.
இதனால் திருச்சி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் புதிய அரசு கலைக்கல்லுாரிக்கு வருகின்றனர். எனவே, தரகம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், புதிய பஸ் ஸ்டாண்டை அமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.